*
ஆதியே துணை
மெய்வழிச் சாலையின் சிறப்புகளை விவரிக்கவென்றால் அதற்க்கு எவ்வளவோ காலம் வேண்டும். அடியேன் எனக்கு தெரிந்த மெய்வழி பற்றிய மகா மகத்துவங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த தகவல் எதார்த்த நன் மனத்தவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நல்ல எண்ணத்துடன் என் குரு தேவ தேவேசர் பிரம்ம பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களை பிரார்த்தித்து வேண்டி எழுத முயற்ச்சிக்கிறேன்.
இந்த தகவலில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னித்து அருளுமாறும் எல்லாம் வல்ல என் மெய்யருட் குரு பிரான் பிரம்ம பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களை பிரார்த்தித்து வேண்டி எழுத முயற்ச்சிக்கிறேன்.
இந்த உலகத்தில் எத்தனையோ சாதி சமய வேறு பாடுகள் இருந்தாலும் அவ்வளவையும் அடியோடு நீக்கி அறுபத்து ஒன்பது சாதிகளை ஒன்றுபடுத்தி பல ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்களை ஒரு குடைக்குள் ஆக்கி ஆண்டுகொண்டு வரும் அந்த மெய்வழி அண்ணலின் மாட்சியை என்னவென்று புகழ்வது!.
ஆம் மெய்வழி சாலையில் இந்து, முஸ்லிம், கிருஸ்துவர் மற்றும் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற வேறுபாடு இல்லை.
இந்த உலகத்தில் நிலவும் மிகப்பெரும் பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணம் சாதி சமய வேறுபாடுதான் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
ஒரு சாதி அல்லது வகுப்பை சார்ந்தவர் மற்றொரு வகுப்பை சார்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வது மெய்வழி சாலையில் ஓர் சாதாரண நிகழ்வு!.
நீதி திருமண பத்திரிக்கை அழைப்பிதழில் இருவீட்டார்களும்
மிகவும் மகிழ்ச்சியாக இருவேறு சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளும் அதிசயம் எங்கும் காண முடியாத ஒரு ஆச்சரியமான உண்மை.
சாதி வேறுபாடுகளை ஒழிக்கவேண்டும் என்று எவ்வளவோ முயற்சி எடுக்கப்படுகிறது. ஆனால் சாதி வேறுபாடு எங்கும் மாறியதாக காண முடியவில்லை!
ஆனால் ஒன்றல்ல இரண்டல்ல, அறுபத்து ஒன்பது (69) சாதி மக்களும் ஒருவருக்கொருவர் மத வேறு பாடு இன்றி ஒரே மெய்வழி குடும்பமாக வாழ்வது என்றால் இது எந்த முயற்சி கொண்டு யாரால் முடியும் என்று நன் மன மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்!. நமது பத்திரிக்கைகளும், மீடியாக்களும் ஏனோ இந்த பேருண்மையை உலகிற்கு எதார்த்த உணர்வுடன் எடுத்து உரைக்க வில்லை.
மதங்களை உருவாக்கியது இறைவனே ஆனால் மத ஏற்ற தாழ்வு மனிதர்களாக ஏற்படுத்திக் கொண்டது. இறைவன் ஒருவரே என்ற உண்மை தத்துவத்தை பல வண்ண வண்ண மாக, திரு வக்கியங்கலாகவும், அதியற்புத பாடல்களாகவும் உலகிற்கு வெளியாக்கி அருளியுள்ளார்கள். அவை கேட்பவர்கள் உள்ளத்தை நெகிழச்செய்யும்.
மெய்வழி சாலை எந்த கட்சியையும் சார்த்தது அல்ல.
திரு வைகோ அவர்கள் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக மெய்வழிச் சாலை
சென்று வந்த விபரம் பற்றியும் அங்கு நடக்கும் நீதி திருமண சிறப்பு
பற்றியும் கீழே உள்ள வீடியோவில் மிகவும் அற்புதமாக விவரிக்கிறார்.
Vaiko Describes about Meivazhi Salai Marriage
"மெய்வழி சாலையிலே திரு <> அவர்களுடைய மகள் திருமணம் நடை பெற்றது. அது ஒரு
புதிய உலகம். நான் பார்க்காத உலகம். கேள்விப்பட்டு இருக்கிறேனே தவிர. அவர்கள் பின்பற்று கின்ற
நடைமுறை, கடை பிடிக்கக் கூடிய சில பண்பாடு, பழக்க வழக்கங்கள் எனக்கு பிரமிப்பு ஊட்டியது.
ஜாதி மத எல்லைகளை எல்லாம் கடந்து அவர்கள் அந்த மெய்வழிச்சாலை என்ற பெயருக்கேற்றவாறு உன்னதமான சில நெறிகளின் அடிப்படையிலே இயங்குகிறார்கள்.
அதை உருவாக்கியவர் ஒரு இஸ்லாமிய சமூகத்திலே பிறந்தவர். ஒரு புதிய
உலகத்தையே படைத்திருக்கிறார் அங்கே . ஏறத்தாள மூன்று மணி நேரம்
அங்கே நாங்கள் இருந்தோம்.
பணிஆற்றகூடிய தோழர்களெல்லாம் அங்கே வந்திருந்தார்கள் . அதேபோல மெய்வழி ச் சாலை ஆனந்தர்கள் அங்கே ஏராளமாக கலந்துகொண்டார்கள் . பாடல், தமிழ் பாடல்கள் ஒலிக்க.
ஒவ்வொன்றையும் முறையாக அந்த திருமணத்தை நடத்தினார்கள், பகுத்தறிவு திருமணம்தான்.
மணமகனை அழைப்பதும், மணமகளை அழைப்பதும், பூக்களை தூவுவதும், ஒவ்வொன்றுக்கும் பாடலை பாடி அழைத்துக்கொண்டு வருவதும், இருவரும் உறுதிமொழி ஏற்ப்பதும், வெள்ளை பூக்கள் சிவப்பு பூக்கள் அந்த தண்ணீர் குடங்களில் நிரம்ப வைத்து அதற்க்கு விளக்கம் சொல்லுவதும். வெண்மைக்கு ஒரு விளக்கமும், சிவப்புக்கு ஒரு விளக்கமும் தருவதும். அந்த நீர் மாற்றுவதற்க்கான ஒரு விளக்கம் தருவதும்.
இல்லறம் எப்படி இயங்க போகிறது என்பதை மிக நுணுக்கமான செய்தியாக தந்தபோது, நான் மிகுந்த வியப்பும், ஆச்சரியமும் அடைந்தேன். அவ்வளவு அற்புதமாக அதை நடத்தினார்கள்.
Vaiko Describes about Meivazhi Salai Marriage - Video Dailymotion
தொகுப்பு:

அதைப்போலவே, பகுத்தறிவு திருமணங்களில் உறுதிமொழி ஏற்ப்பதை போலவே மணமகன் உறுதிமொழியை சொல்லி அதற்க்கு பிறகு மணமகனுக்கு திருமணத்திலே சம்மதமா என்று கேட்டு அவர் சம்மதம் தெரிவித்து, மணமகளுக்கு சம்மதமா என்று உறுதிமொழி கேட்டு பிறகு
மணமகள் சம்மதம் தெரிவித்து அந்த திருமணம் அங்கே நிறைவேறியது.
ஈருடல் ஓர் உயிராக எப்படி இல்லறம் தொடகுகிறது என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே திருமணத்தை நடத்துகிறார்கள் ..."
தொகுப்பு:
சாலை சம்பூரணன்
மெய்வழி சாலை விலாசம்:
MEIVAZHI SALAI
PUDUKKOTTAI DISTRICT,
ANNAVASAL VIA
TAMILNADU-622101,
INDIA
Web references:
http://en.wikipedia.org/wiki/Meivazhi
http://salaitamil.blogspot.com/
http://traveloveatfun.blogspot.com/
மெய்வழி சாலை விலாசம்:
MEIVAZHI SALAI
PUDUKKOTTAI DISTRICT,
ANNAVASAL VIA
TAMILNADU-622101,
INDIA
Web references:
http://en.wikipedia.org/wiki/Meivazhi
http://salaitamil.blogspot.com/
http://traveloveatfun.blogspot.com/